- by Editor
- 2 years ago
ஈரானில் இரண்டு வார போராட்டங்களில் 2,000 பேர் பலி
-
- by Editor,
- 8 months ago
- in உலக செய்திகள்
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரான் அரசாங்க அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை ஈரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
எனினும், உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் மற்றும் எத்தனை பேர் பாதுகாப்புப் படையினர் என்ற தனித்தனி விபரங்களை அவர் வெளியிடவில்லை.
அத்துடன், இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் பயங்கரவாதிகள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.