Friday, October 9, 2026

இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 21 பேர் பலி


தென்கிழக்கு காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

அதேவேளை, இந்த தாக்குதலினால் பலர் பலத்த காயம் அடைந்துள்ளமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த போரினால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும், காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


you may also like