- by Editor
- 1 month ago
அமெரிக்காவிடம் மண்டியிடுகிறதா கியூபா? - ஜனாதிபதி டிரம்ப் எழுப்பியுள்ள புதிய சர்ச்சை
-
- by Editor,
- 4 months ago
- in உலக செய்திகள்
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், “குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எவரும் கியூபா குறித்து என்னிடம் பேசவில்லை. கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு, அது வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தற்போது அது அமெரிக்காவிடம் உதவி கோருகிறது. இதை குறித்து நாம் விரிவாக பேசுவோம். இதற்கிடையில் நான் சீனாவுக்கு புறப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
கியூபாவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலையை கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், அந்த நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் உதவி அவசியம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கியூபா விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.