Sunday, October 11, 2026

இஸ்ரேலுக்கு எதிராக தரைவழி தாக்குதல்களை மேற்கொள்ள ஹெஸ்புல்லா தயாராக உள்ளது


இஸ்ரேல் தொடர்ச்சியாகப் பரந்துபட்ட நிலையில், வான் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராகத் தரைவழி தாக்குதல்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக ஹெஸ்புல்லாவின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலினால் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பின்னர், உயர் அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார்.

திட்டமிட்டுள்ள தரைவழி தாக்குதல் நீண்ட நாள்களுக்கு இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், லெபனான் எல்லைக்கு அருகாமையில் துருப்பினர் வான், கடல் மற்றும் தரை தாக்குதல்களை மேற்கொள்வதற்குத் தயாராகவுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் லெபனானில் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, லெபனானின் சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், நேற்று முன்தினம் ஐன் அல்-டெல்பில்லில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் 32 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

you may also like