Friday, October 9, 2026

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்கள் விடுதலை


இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் நேற்று (03) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்போது, முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு ஒவ்வொருவருக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னரும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த 9 இந்திய மீனவர்களையும் நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.

you may also like