- by Editor
- 7 months ago
புத்தாண்டு சலுகை - QR முறையில்லாமல் எரிபொருள் விநியோகம்
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது ‘QR’ முறை நடைமுறையில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதேவேளை, வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.