- by Editor
- 2 years ago
இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்!
இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்!
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச போட்டித் தொடரில், தம்புள்ளவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி சிறப்பான வெற்றியை பதிவுச்செய்தது.
இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வென்று சமநிலையில் காணப்படுகின்றன.
போட்டியின் ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்வு செய்தது.அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி,
- பங்களாதேஷ் : 177/7 (20 ஓவர்கள் நிறைவில் ) : லிட்டன் தாஸ் 76 (50), ஷமிம் ஹொஸைன் 48 (27), தெளஹிட் ஹிரிடோய் 31 (25) ஓட்டங்கள்.
- இலங்கை அணி பந்துவீச்சு : பினுர பெர்ணாண்டோ 3/31 [4], நுவான் துஷார 1/30 [4], மகேஷ் தீக்ஷன 1/30 [4])
178 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
- இலங்கை : 94/10 (15.2 ஓவர்கள்) : பதும் நிஸங்க 32 (29), தசுன் ஷானக 20 (16) ஓட்டங்கள்.
- பங்களாதேஷ் அணி பந்துவீச்சு : ரிஷாட் ஹொஸைன் 3/18 [3.2], ஷொரிஃபுல் இஸ்லாம் 2/12 [3], மொஹமட் சைபுடீன் 2/21 [3], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/14 [3], மெஹிடி ஹஸன் மிராஸ் 1/26 [3])
போட்டியின் ஆட்ட நாயகன்: லிட்டன் தாஸ், தெரிவுச்செய்யப்பட்டார்