Sunday, October 11, 2026

காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் டனிஸ் அலி கைது


காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு வழங்குவதற்கு காலம் தாழ்த்தப்பட்டமை குறித்து ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தின் போது டனிஸ் அலி மீது சில தாக்குதல் நடத்தியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், டனிஸ் அலி, பயணச் சீட்டு வழங்குவதற்கு காலம் தாழ்த்தப்படுவது தொடர்பில் சமூக ஊடகத்தில் நேரலையாக பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் டனிஸ் அலியை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

you may also like