Sunday, October 11, 2026

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிக்கிறது


இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்ததாவது, நாட்டிலுள்ள சுமார் 25% முதல் 30% வரையிலான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன. தற்போதைய எரிவாயு விலையை தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளை, சில சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பரோட்டா ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

you may also like