Thursday, October 8, 2026

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்


இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலையை சுற்றி 4 கிலோ மீற்றர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும் எரிமலை வெடித்ததால், அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 இதேவேளை, இந்தோனேசியாவின் ருயாங் தீவில் கடந்த 16 ஆம் திகதி எரிமலை வெடித்து சிதறியமை குறிப்பிடத்தக்கது. 

you may also like