Friday, October 9, 2026

சந்தேக நபரைத் தாக்கிய இரு பொலிஸார் இடைநீக்கம்


பருத்தித்துறை பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப்

பிரிவில் பணிபுரியும் இரண்டு பொலிஸார் சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபர் பருத்தித்துறை வைத்தியசாலையின் இலக்கம் 07 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் பருத்தித்துறை குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது அதிகாரி சம்பவத்தன்று சம்பவ இடத்திலிருந்து வெளியேறினார்.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நீதிமன்றில் முற்படுத்தியபோது, இருவரும் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இருந்தபோதும் இரு பொலிஸாரும் காங்ககேசந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணை முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். 

you may also like