Sunday, October 4, 2026

இலங்கை அரசு இந்தியாவின் கைப் பொம்மையாகியுள்ளது: வசந்த முதலிகே குற்றச்சாட்டு


"அரசாங்கம் இந்தியாவின் கைபொம்மையாகச் செயற்பட்டு வருகின்றது."

- இவ்வாறு மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் -

"நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை.

வெளிநாடுகளில் கடன்பெற்று அதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளனர்.

இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமையவே அனைத்துத் திட்டங்களும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு ஆதரவான செல்வந்தர்களுக்கு மாத்திரமே சலுகைகளை அரசாங்கம் வழங்குகின்றது.

இவ்வாறான ஒரு நாட்டிலேயே பொருளாதார பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியும், மத்திய வங்கியின் ஆளுநரும் தெரிவிக்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் இன்று வறுமையில் அல்லற்படுகின்றனர்." - என்றார்.


you may also like