Saturday, October 10, 2026

இந்தியாவில் இரு நாள்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 54 பேர் உயிரிழப்பு


இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த இரு நாள்களுக்குள் ஏற்பட்ட வாகன மற்றும் தீ விபத்துக்களில் சுமார் 54 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் உத்தரபிரதேசம் - சாஜகான்பூரில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸுடன், கனரக வாகனம் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, மூன்று மணி நேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பின்னரே பல உடல்கள் கனரக வாகனத்தின் கீழ் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குஜராத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் வரை பலியாகினர். டில்லியின் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

you may also like