- by Editor
- 2 years ago
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: ஹமாஸ் பொறுப்பேற்பு
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
லெபனானில் இருந்து இஸ்ரேல் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா நகரின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் சுமார் 12 ஏவுகணைகளை ஹமாஸ் ஏவியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. முதலில் வான்வழியாக மேற்கொண்ட இந்த தாக்குதல் தற்பொழுது தரைவழியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், காசாவில் பலி எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியுள்ளது என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தாக்குதலை நிறுத்த முடியாது என இஸ்ரேல் தெரிவித்தது.
இந்த சூழலில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை தலைமையிடமாக கொண்டு ஹமாஸ் இயங்கி வருகிறது. லெபனானின் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு உள்ளது. இத்தகைய சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
காசா வாழ் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானில் இருந்து கிரியாத் ஷ்மோனா நகரை ஏவுகணை மூலம் தாக்கியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இதேவேளை, காசா நகரில் சுமார் 20 ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ள 4 பள்ளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.