- by Editor
- 1 month ago
அவசரமாக கூடவுள்ள பராளுமன்றம்!!
அவசரமாக கூடவுள்ள பராளுமன்றம்!!
எதிர்வரும் திங்கட்கிழமை 30 ஆம் திகதி அவசரக் கூட்டத்திற்காக பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளிற்கிணங்க, நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளையின்படி அவசரக் கூட்டம் கூட்டப்படும் என்று குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும், பணியாளர்கள் பிரிவின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன, வரவிருக்கும் பட்ஜெட் தொடர்பான தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த அவசரக் கூட்டம் கூட்டப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.