Saturday, October 10, 2026

அரவிந்த டி சில்வாவிற்கு Hall of Fame விருது


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான போட்டியில் அரவிந்த டி சில்வா சதம் அடித்தார்.

அரவிந்த டி சில்வா இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6361 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

308 ஒருநாள் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரவிந்த டி சில்வா, 9284 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இது கிரிக்கெட் வீரர் அல்லது வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் வழங்கப்படும் உயரிய கௌரவமாகும்.

you may also like