- by Editor
- 1 year ago
அரசு பழிவாங்கும் நோக்கில் செயற்படுகிறது - மஹிந்த ஆதங்கம்!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
அரசு பழிவாங்கும் நோக்கில் செயற்படுகிறது - மஹிந்த ஆதங்கம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட பெரியது எதுவும் இல்லை. அது எங்களிடம் இருக்கும் வரை, எந்தவொரு சலுகையையும் நீக்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை." என்றார்
ஊடகவியலார்களின் கேள்வி - இது நடந்தால், நீங்கள் விஜேராமவை விட்டு வெளியேறி மெதமுலனவுக்குச் செல்ல வேண்டுமா? உங்கள் கருத்துப்படி, அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற செயலைச் செய்கிறது?
பதில் தெரிவித்த மஹிந்த - "மெதமுலன விஜேராமவை விட மிகச் சிறந்தது." அனால் தற்போதைய அரசு "பழிவாங்குவதற்கே" செயற்படுகிறது என்றார்.