- by Editor
- 2 years ago
அரசாங்கத்திடம் தூரநோக்கு உள்ளதா? – விஜயபால ஹெட்டியாராச்சி கேள்வி
-
- by Editor,
- 6 months ago
- in இலங்கை செய்திகள்
சவால்களை எதிர்கொள்ளத்தேவையான தூரநோக்கு அரசாங்கத்திடம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
''அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடகாலத்திற்கும் மேலாகின்றது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை குறுகிய காலத்திற்குள் பெற்றுக்கொடுக்க தம்மால் முடியும் என கூறியது. ஆனால் அந்த விடயம் இடம்பெறுவதாக தெரியவில்லை .
அதேபோன்று அரசாங்கத்திற்கு தற்போது தூநோக்கு பார்வை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிரணி என்ற வகையில் நாடு ஏதெனும் சவால்களை எதிர்கொள்ளவுள்ள தருணங்களில் அதனை எதிர்கொள்ளத்தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே முன்னெடுத்துள்ளோம்.
நாட்டின் ஜனநாயகத்திற்கு தேவையான எதிர்கால முன்னெடுப்பு நடவடிக்கைகளை எதிர்கட்சித்தலைவர் தலைமையில் முன்னெடுத்துள்ளோம்.'' - என்றார்.