Friday, October 9, 2026

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகலில் நிலநடுக்கம் - இலங்கையை பாதிக்குமா?


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகலில் நிலநடுக்கம் - இலங்கையை பாதிக்குமா?

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று (29) அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

- ஊடகங்களுக்கு உரையாற்றிய புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன்,

இன்று அதிகாலை 5.18 மணியளவில் இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட 260 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறினார். 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாகவும், அவுஸ்திரேலியாவுக்கு அருகில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலநடுக்கங்கள் மற்றும் பின்னதிர்வுகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like