- by Editor
- 2 years ago
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவிப்பு
-
- by Editor,
- 6 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் தேவையற்ற வகையில் அதிகளவில் பொருட்களை குவித்து வாங்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை பணிப்பாளர் அசேல பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலத்திலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் எந்த குறையும் இல்லை என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். கொள்கலன்களை பரிசோதிக்கும் இடவசதி குறைவால் சில தாமதங்கள் ஏற்பட்டதாகவும், தற்போது அந்த வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்ததாவது, நாட்டில் உண்மையான தட்டுப்பாடு இல்லை. இடைத்தரகர்கள் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை உயர்த்தியுள்ளனர்.
மேலும், அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மார்ச் மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையும் என்றும், ஏப்ரல் முதல் வாரத்தில் பருப்பு விலை ரூ. 265–270 வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விலை உயர்ந்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிகபட்சம் ரூ. 20 வரை மட்டுமே மாற்றம் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில், பருப்புக்கு கட்டுப்பாட்டு விலை இல்லாததால் சில்லறை விலைகளில் நேரடி தலையீடு சிரமமாக இருப்பதாக விளக்கினார்.
ஆனால், பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சித்திரைப் புத்தாண்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சுமார் 90% ஏற்கனவே கையிருப்பில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.