- by Editor
- 2 years ago
அநுர அரசை எதிர்த்துசகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: உதய கம்மன்பில வலியுறுத்து
-
- by Editor,
- 11 months ago
- in இலங்கை செய்திகள்
"வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது விருப்பம். அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது. ஏனெனில் அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை."
- இவ்வாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.