Thursday, October 8, 2026

அண்டனி பிளிங்கன் சீனாவுக்கு விஜயம்


அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் நேற்று ஷங்காய் நகரைச் சென்றடைந்துள்ளார் எனவும் இன்று பீஜிங்கில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.

உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளுக்கு, 95 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவதற்கு அமெரிக்க செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன், டிக்டொக் செயலியை தடை செய்வதற்கான சட்டமூலத்தையும் அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன், சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  

you may also like