- by Editor
- 2 months ago
40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை நீக்க தீர்மானம்!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை நீக்க தீர்மானம்!
இலங்கையின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை இன்று (25) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஹோட்டல் ஷோ கொழும்பு 2025" கண்காட்சி இன்று காலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.