Sunday, October 11, 2026

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்தார் சரத்குமார்


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று பா.ஜ.கவில் இணைத்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பா.ஜ.கவுடன் இணைத்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பா.ஜ.கவுடன் தனது கட்சியை இணைத்துள்ளமை அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இணைப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார்,

“பா.ஜ.கவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு, நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காமராஜரைப் போல ஆட்சி செய்கிறார்." - என்றார்.


you may also like