- by Editor
- 5 months ago
பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் தாக்குதல்: 8 பேர் சுட்டுக்கொலை!
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
பாகிஸ்தானின் குவாடர் துறைமுக ஆணைய வளாகம் மீது தாக்குதல் நடத்திய, 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு இராணவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகின்றது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது.
இந்த துறைமுகத்தில் அதிகாரிகள் பணிபுரியும் வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தால் துறைமுகத்துக்குள் பெரும் பரபரப்பு நிலவியதுடன், அங்கிருந்த ஊழியர்கள் உடனே பல இடங்களில் பதுங்கி கொண்டனர்.
இதனை அறிந்த இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர் என கூறப்படுகின்றது.
இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.