- by Editor
- 2 years ago
மடோனா யார்? வன்னி மண்ணிலிருந்து ஜீ தமிழ் சரிகமபா மேடை வரை வந்த ஈழத் தமிழ்ச்சுடர்
-
- by Editor,
- 1 week ago
- in இலங்கை செய்திகள்
இன்று இலங்கையின் எல்லைகளைத் தாண்டி, இந்தியாவின் மிகப்பெரிய இசை மேடைகளில் ஒன்றான ஜீ தமிழ் ச ரி க ம பா மேடையில், தனது இனிமையான குரலால் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்து நிற்கும் ஒரு இளம் குரல்தான் மடோனா!
Mega Audition சுற்றுக்கு தேர்வாகியிருக்கும் இந்த மடோனா யார்?
அவருடைய குரலின் பின்னால் இருக்கும் கதை என்ன?
இதோ… ஒரு குரலின் பின்னால் இருக்கும் ஒரு வாழ்க்கைக் கதை.
மடோனா அவர்கள் வன்னி மண்ணில் பிறந்தவர்.
ஆனால், அவருடைய வாழ்க்கையின் வேர்களும், வளர்ச்சியும், கனவுகளும் ஆழமாக பதிந்திருப்பது யாழ் மண்ணில்தான்.
அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு ஒன்று சிறு வயதிலேயே ஏற்பட்டது.
அவருடைய தந்தை, போர்க்காலத்தில் நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த மாவீரர் ஆவார் .
ஒரு குழந்தைக்கு தந்தையை இழப்பது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி.
ஆனால், அந்த வலிக்குப் பிறகு, அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்ற ஒரு பெண் இருந்தார்.. மடோனாவின் தாய்.
தாயாகவும், தந்தையாகவும் இருந்து, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார் அவர்.
மடோனாவுக்கு சிறு வயதிலிருந்தே இசையின் மீது அளவில்லாத ஆர்வம். ஆனால் குடும்பச்சூழ்நிலை அதற்கு பல முற்றுப்புள்ளிகள் வைத்தன.
அனால், எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும், தனது மகளின் கனவை மட்டும் அந்தத் தாய் கைவிடவில்லை.
அந்தச் சிறிய குரலில் இருந்த பெரிய கனவை முதலில் உணர்ந்தவர் அவரது தாய்தான்.
“என் மகள் ஒருநாள் பெரிய மேடையில் பாட வேண்டும்…”
என்ற அந்தத் தாயின் கனவு…
இன்று படிப்படியாக நனவாகிக் கொண்டிருக்கிறது.
மடோனாவின் இசைப் பயணத்தில் அவரது தாய் தொடர்ந்து பக்கபலமாக இருந்தார்.
அன்று மட்டுமல்ல…
இன்றும் கூட, மடோனாவின் ஒவ்வொரு இசைப் பயணத்திலும் அவருடைய தாயின் ஆதரவு நினல் போல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இலங்கையில் jaffna got tallent மற்றும் , வசந்தம் தொலைக்காட்சியின் M Studio மற்றும் Star War போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனது இனிமையான குரலையும் இசைத் திறமையையும் வெளிப்படுத்திய மடோனா, ஏற்கனவே பல ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
அந்த மேடைகளில் இருந்து தொடங்கிய அவரது இசைப் பயணம்…
இன்று இலங்கையின் எல்லைகளைத் தாண்டி…
இந்தியாவின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்ச்சி மூலம் உலகத் தமிழர்கள் முன்னிலையில் ஒரு மிகப்பெரிய இசை மேடையில் தடம் பதித்துள்ளார்.
ஒரு காலத்தில் தனது மகள் பாட வேண்டும் என்று கனவு கண்ட அந்தத் தாயின் கண்களுக்கு…
இன்று தனது மகள் ஒரு சர்வதேச மேடையில் நிற்கும் காட்சி தெரிகிறது.
இது வெறும் ஒரு பாடகியின் வெற்றி அல்ல…
இது ஒரு தாயின் கண்ணீருக்குக் கிடைத்த பதில்.
இது ஒரு மகளின் கனவுக்குக் கிடைத்த அங்கீகாரம்.
இது வன்னி மண்ணில் பிறந்து, யாழ் மண்ணில் வளர்ந்து, இன்று உலகத் தமிழர்களின் முன்னிலையில் தனது குரலை ஒலிக்கச் செய்யும் ஒரு இளம் திறமையின் பயணம்.
நம் இனத்தின் விடுதலைக்காகப் போராடி தன் உயிரை மாய்த்துக் கொண்ட ஒரு மாவீரனின் மகளின் வெற்றி நம் இனத்தின் ஒட்டுமொத்த வெற்றியாக தான் நாம் பார்க்க வேண்டும்.
மடோனாவின் குரலில் ஒரு இனிமை இருக்கிறது.
ஆனால்…
அந்த குரலுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
ஒரு தாயின் தியாகம் இருக்கிறது.
ஒரு குடும்பத்தின் வலி இருக்கிறது.
ஒரு மகளின் கனவு இருக்கிறது.
அதனால்தான் உங்கள் ஒவ்வொரு பாடலும் கேட்பவர்களின் இதயத்தைத் தொடுகிறது.
இன்று ஜீ தமிழ் சரிகமபா மேடையில் நீங்கள் நிற்கும் இந்த தருணம்…
உங்களுடையது மட்டுமல்ல.
உங்களை வளர்த்த தாயுடையது.
உங்களை ஆதரித்த குடும்பத்தினருடையது.
உங்கள் திறமையை நம்பிய அனைவருடையது.
ஆனால், மடோனாவின் இந்தப் பயணம் இத்துடன் முடிந்துவிடக் கூடாது.
மடோனாவின் வெற்றி… ஒரு தனிப்பட்ட வெற்றியாக மட்டும் இல்லாமல், எங்கள் ஈழத் தமிழர்களின் வெற்றியாகவும் அமைய வேண்டும்.
வன்னி மண்ணில் பிறந்து, யாழ் மண்ணில் வளர்ந்து, இன்று சர்வதேச மேடையில் நிற்கும் மடோனாவுக்கு…
உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
அவருடைய குரல் இன்னும் பல சுற்றுகளைத் தாண்டி முன்னேற வேண்டும்.
அவருடைய ஒவ்வொரு வெற்றியிலும்…
எங்கள் மண்ணின் பெருமையும் ஒலிக்க வேண்டும்.
எங்கள் மக்களின் கனவும் ஒலிக்க வேண்டும்.
எங்கள் ஈழத் தமிழர்களின் ஆதரவும் ஒலிக்க வேண்டும்.
மடோனா வெற்றி பெறும்போது…
அது மடோனாவின் வெற்றி மட்டுமல்ல…
அவரை வளர்த்த தாயின் வெற்றி.
அவரை ஆதரித்த குடும்பத்தின் வெற்றி.
அவரை நேசித்த மக்களின் வெற்றி.
அதற்கும் மேலாக…
எங்கள் ஈழத் தமிழர்களின் வெற்றி!