Sunday, October 11, 2026

கிராம உத்தியோகத்தர்கள் தெரிவுக்கான பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின


வெற்றிடமாக காணப்பட்ட 2,002 கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிராம உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்காகக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சைக்கு அமைய 4 ஆயிரத்து 232 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நேர்முகத்தேர்வுக்கு தகுதிபெற்றவர்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

தற்போது தெரிவானவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் மிக விரைவில் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may also like