- by Editor
- 2 years ago
இன்று மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் - மதுவரி திணைக்களம் அறிவிப்பு
-
- by Editor,
- 1 day ago
- in இலங்கை செய்திகள்
உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று (03) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் 3ஆம் திகதி சர்வதேச மதுவிலக்கு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மதுபானப் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது முற்றாகத் தவிர்ப்பதையோ ஊக்குவிப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதனை முன்னிட்டு, மதுபான விற்பனை நிலையங்களை இன்று மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.