- by Editor
- 2 months ago
IRIS Dena கப்பல் குறித்து ஈரான் இராணுவத்தின் விசேட அறிவிப்பு
-
- by Editor,
- 6 months ago
- in இலங்கை செய்திகள்
அண்மையில் ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது.
கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மீது தாக்குதலுக்குள்ளானது.
கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.