- by Editor
- 2 years ago
IPLக்கு மதீஷ பத்திரண தயார்
-
- by Editor,
- 5 months ago
- in விளையாட்டு செய்திகள்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தனது உடற்தகுதி பரிசோதனையில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன்படி, இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்க அவர் விரைவில் இந்தியா புறப்பட உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சில காலம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.
தற்போது, மீண்டும் விளையாடத் தேவையான முழு உடற்தகுதியையும் அவர் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இந்த ஆண்டு IPL தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது.