- by Editor
- 1 month ago
FCID அழைப்பாணைக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்றாரா ஷிரந்தி ராஜபக்ஷ?
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன், ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான SQ-469 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், FCID இல் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், FCID இல் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு அழைப்பாணையும் வழங்கப்படவில்லை என்றும் குறித்த குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இன்று அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அழைப்பாணைக் கடிதத்தை ஷிரந்தி ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
FCID தரப்பிலிருந்து இதற்கு முன்னர் எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், ஷிரந்தி ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு வந்த பின்னரே குறித்த கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.