Saturday, October 10, 2026

38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்


இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகும்.

விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் இந்த விஜயத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும் என்பது இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.

you may also like