Saturday, October 10, 2026

உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா!


அவுஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகவும் உலக கிண்ணத்தை வென்றுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று அவுஸ்திரேலிய அணி இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. (a)

you may also like