- by Editor
- 2 years ago
கொழும்பு கோட்டை - திருகோணமலை ரயில் யானையுடன் மோதி தடம்புரள்வு!
-
- by Editor,
- 7 months ago
- in இலங்கை செய்திகள்
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த இரவு நேர ரயில் இன்று அதிகாலை கித்துல்லுத்துவ பகுதியில் காட்டு யானையுடன் மோதியதில் தடம் புரண்டுள்ளது என்று பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
ரயிலுடன் மோதிய யானை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.
இயந்திரத்தின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் தடம் புரண்டதால் ரயில் பாதையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இன்று திருகோணமலைக்கும் கல்ஓயா சந்திக்கும் இடையிலான ரயில் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை நீராவி எஞ்சின் பொருத்தப்பட்டு திருகோணமலைக்கு வந்திருந்த விசேட வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் ரயில் மீண்டும் கொழும்பு திரும்புவது இன்று தாமதமடைந்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விபத்தில் இறந்த யானையின் மரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்