- by Editor
- 2 years ago
22வது திருத்த மனுக்கள் விசாரணை - ஜனாதிபதி சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று (01) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்ட பல சட்டத்தரணிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின்படி, நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது என வாதிட்டார்.
அனைத்துத் தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக விசாரணையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.