- by Editor
- 2 weeks ago
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தினார்.
குறித்த கடிதத்தின் மூலம், முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
இந்தக் கடிதத்தை கண்டுபிடிப்பதற்கே முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும், எப்படியோ அது தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய நிலைமை எங்கு செல்கிறது என்பதை மகாநாயக்க தேரர்களே புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்த வயது வரம்புகளை அதிகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பொருத்தமானவை அல்ல என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.