- by Editor
- 5 months ago
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட இரு சட்டமூலங்கள் மீது இன்று வாக்கெடுப்பு
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
இரண்டு நாள் இரண்டாம் வாசிப்பு விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை 7.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நேற்று (24) ஆரம்பமான நிலையில், இன்று இரண்டாவது மற்றும் இறுதி நாளை எட்டியுள்ளது.
இந்த சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்மானம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலத்தினை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சிறப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நீதித்துறை (திருத்த) சட்டமூலத்தினை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதங்கள் நிறைவடைந்த பின்னர், இரு சட்டமூலங்கள் மீதும் திட்டமிட்டபடி மாலை 7.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.