- by Editor
- 2 years ago
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி வெளியானது
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, முதலாம் பகுதி வினாத்தாள் முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை நேர அட்டவணைக்கு ஏற்ப முன்கூட்டியே தயாராக இருக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.