Sunday, October 4, 2026

நள்ளிரவு முதல் எரிபொருள் விதிமுறையில் மீண்டும் QR முறைமை


நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, முன்பிருந்த எரிபொருள் ஒதுக்கீட்டு முறை மீண்டும் அமலுக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையை தற்காலிகமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அந்த காலத்தில், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறை பயன்படுத்தப்பட்டதுடன், டீசல் வாகனங்களுக்கு QR முறை மாற்றமின்றி தொடர்ந்தது.

இந்நிலையில், நாளை நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் QR முறைமை கட்டாயமாக அமுல்படுத்தப்பட உள்ளது. 

you may also like