Wednesday, October 7, 2026

16 மாவட்டங்களில் அமுலாகும் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் !


16 மாவட்டங்களில் அமுலாகும் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் !

இலங்கையின் 16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. நுளம்பு கட்டுப்பாட்டு வாரமானது இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

- இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரிசில்லா சமரவீர தெரிவிக்கையில்,

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையினால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து வருகின்றது, அதிகரித்துவரும் நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்த நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டின் 16 மாவட்டங்களில் உள்ள 111 சுகாதார வைத்தியப் பிரிவுகளில் மீண்டும் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நுளம்புகள் இனப்பெருக்கம் அடையக்கூடிய இடங்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அகற்றப்படாமல் இருந்தால் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ் வருடம் நாடளாவிய இதுவரையான காலப்பகுதியில் ரீதியில் 26,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், 14 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 45 சதவீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

மேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிக டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

you may also like