Wednesday, October 7, 2026

149 பயணிகளுடன் டுபாயில் இருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம்


போர்ப் பதற்றத்துக்கு இடையே டுபாயிலிருந்து டில்லிக்கு நேற்று முதலாவது ஏர் இந்தியா விமானம் வந்திறங்கியது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா ஆகிய நாடுகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாய் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த போர்ப் பதற்றத்துக்கு இடையே நேற்று முன்தினம் மாலை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரம், ச வூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அபுதாபியில் இருந்து ஒரு விமானம் நேற்று காலை டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் 149 பயணிகள் வந்தனர்.

அதேபோல மற்றொரு விமானம் அபுதாபியில் இருந்து கிளம்பி மும்பையில் நேற்று தரையிறங்கியது. டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பயணிகளைக் கண்டதும் அவர்களது குடும்பத்தார், உறவினர்கள் கட்டியணைத்து மகிழ்ச்சியடன் வரவேற்றனர்.


you may also like