Sunday, October 4, 2026

ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைக்கத் தீர்மானம்


5 வயதிற்குட்பட்ட ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதலாம் தர மற்றும் 2 ஆம் தர ஜெய்லர், சார்ஜன்ட், ஒழுங்குமுறை அதிகாரிகள், தாதியர் மற்றும் மருந்து கலவையாளர் பதவிக்காக இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

you may also like