- by Editor
- 2 years ago
"Rebuilding Sri Lanka" நிதியம் குறித்து எழும் அடுக்கடுக்கான கேள்விகள்
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
“Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு கிடைத்த எந்தவொரு நிதியும் இதுவரை செலவிடப்படவில்லை என சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் ஈ. எம். எஸ். ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் ஆஜராகியபோது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு கிடைத்த தொகைகளில் இருந்து இதுவரை எந்தச் செலவீனமும் மேற்கொள்ளப்படவில்லை என ஈ. எம். எஸ். ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக குழுக் கூட்டத்தில் மேலதிக கலந்துரையாடல்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. “Rebuilding Sri Lanka” நிதியத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.