Thursday, October 8, 2026

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்: சீனா கோரிக்கை!


இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்: சீனா கோரிக்கை!

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிலையானது தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சீனா, இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

- சீன வெளியுறவுத் துறை அமைச்சரக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில் ,

"மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் குறிப்பாக இஸ்ரேல், நாட்டு மக்களின் நலன் கருதி உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இந்த போரில் அமெரிக்கா தலையிடுவதையும் அமெரிக்க படைகள் புகுவதையும் சீனா கடுமையாக எதிர்க்கின்றது.

மேலும், மற்ற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கிறது" என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சரக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

you may also like