- by Editor
- 3 months ago
தங்கச்சிமடத்தில் 5 ஆவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
-
- by Editor,
- 1 year ago
- in இந்திய செய்திகள்
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்திஇ இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பெப்ரவரி 28 ஆம் திகதியிலிருந்து தங்கச்சிமடத்தில் இரவு, பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை 5 ஆவது நாள் போராட்டத்தில், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 6 லட்சம் ரூபாவிலிருந்து 8 லட்சம் ரூபாவாக இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும். தின உதவி தொகை 350 ரூபா என்பதை 500 ரூபாவாக உயர்த்தி வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தீக்குளிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தீக்குளிப்பு போராட்டத்தை மட்டும் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். தங்கச்சிமடம் காத்திருப்பு போராட்ட பந்தலில் மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.