- by Editor
- 1 year ago
"உண்மையான விலை ரூ.700 இருக்க வேண்டும்" - எரிபொருள் விலை குறித்து பிரதமரின் அதிரடி விளக்கம்
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
எரிபொருள் விலையை தற்போதைய நிலையில் உடனடியாகக் குறைக்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருந்தாலும், உள்ளூர் விலையில் உடனடி குறைப்பு மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுவதாக அவர் விளக்கினார். தற்போது அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், அந்தச் செலவின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“உண்மையான கணக்கீட்டின்படி எரிபொருள் லிட்டருக்கு சுமார் ரூ.700 ஆக இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்தச் சுமையை ஏற்றுக்கொள்வதால், தற்போதைய விலையை சுமார் ரூ.400 அளவில் வைத்திருக்க முடிந்துள்ளது,” என பிரதமர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை குறைப்பின் மூலம் நிவாரணம் வழங்கக்கூடிய சூழ்நிலை உருவானவுடன், அது மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.