Monday, October 12, 2026

‘ஜனநாயகன்’ லீக் குறித்து பொய் குற்றச்சாட்டு: தணிக்கை வாரியம் மறுப்பு


‘ஜனநாயகன்’ லீக் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

பத்​திரிகை தகவல் அலு​வல​கத்​தின் மும்பை மண்டல அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை சினிமா தணிக்கை வாரி​யம் கசி​ய​விட்​ட​தாக கூறப்​படும் குற்​றச்​சாட்​டு​கள் ஆதா​ரமற்​றவை. இது தவறாக வழிநடத்​தும் குற்​றச்​சாட்​டு. தணிக்கை வாரி​யம் கே.டி.எம். என்ற பாது​காப்பு முறையை பின்​பற்​றுகிறது.

இந்த கேடிஎம் கடவுச் சொல் சினிமா தயாரிப்​பாளரிடம் மட்​டுமே இருக்​கும். இந்த கடவுச் சொல் இல்​லாமல் யாரும்​ படத்தை பார்க்க முடி​யாது. ஜனநாயகன் படத்​தின் டி.சி.பி. (டிஜிட்​டல் சினிமா தொகுப்​பு) விண்​ணப்​ப​தா​ரரிடம் உரிய ஒப்​புதலுடன் கடந்த 17ஆம் திகதி மும்​பை​யில் ஒப்​படைக்​கப்​பட்​டது. அப்​போது முதல் அந்த நகல் அவர்​களிடம்​தான் உள்​ளது என்று கூறப்பட்டுள்ளது. 

you may also like