Monday, October 12, 2026

மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்: வவுனியாவில் சோகம்


 வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையால் அவரது தந்தை தேடியுள்ளார். இதன்போது காணியின் பின்புறத்தில் மேற்படி இளைஞர் சடலமாகக் கிடந்தமை கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பத்மநாதன் டயான் என்ற 21 வயது இளைஞரே சாவடைந்துள்ளார்.

அவர் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


you may also like