Thursday, October 8, 2026

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் - அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை


ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவும், ஈரானியத் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஈரானிய இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்கா செயற்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனிடையே, ஈரானியத் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தும் அமெரிக்காவின் அறிவிப்பும், அதற்கு ஈரான் வெளியிட்டுள்ள கடும் எதிர்ப்பும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

you may also like