- by Editor
- 2 years ago
ஹெராயினுடன் பெண் கைது!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துன்னாலை பகுதியில் மேற் கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 43 வயதுடைய பெண்ணொருவர் வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 620 மில்லி கிராம் ஹெராயின், 6 லட்சத்து 78 ஆயிரத்து 900 ரூபா பணம் மற்றும் 16 கையடக்கத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டன என்று நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.